...

1 views

பெண்ணின் காதல் தோல்வி
பெண்ணிற்கும் காதல் தோல்வி உண்டு . . .
ஆனாலும் ,
அவள் ஆறுதல்
தேடியதில்லை மதுவிலோ போதையிலோ ....!
நாசமாய்
போனதுமில்லை
அவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை......
மாப்ள- மச்சான் நண்பர்கள் என யாரிடமும்.
நம்மைப்போல் தன
சோகத்தை கூறியதில்லை ....
அவள் தன் சோகத்தை மறப்பதற்கு
கானா மெட்டில் பாடல் பாடியதில்லை .....
அவள் பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !
அவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை ....!
அவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல் தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !
பெண்களின் காதலையும் மதிப்போம்.