...

8 views

I love nature
#WritcoPoemChallenge
Harbinger of our doom,
Hurtling through space,
The asteroid is here...Sathya இந்த இரவு நேரத்தில் பணி தோறும் ஓர் தருணத்தில் எத்தனையோ வகையான பூச்சிகள் தனது மெல்லிசை ராகங்களை பாடிக் கொண்டிருக்கும் வேளையில் மழலைக்கு எப்போதும் பாலூட்டும் நிலவின் அழகில் மயங்கி எங்கிருந்தோ பூக்களின் வாசத்தை திருடிக் கொண்டு வந்த என் மீது தூவி கொண்டிருக்கும் என்னை தழுவி கொண்டிருக்கும் தென்றலில் தாலாட்டு இசையில் வாழை இலையின் மடியில் சாய்ந்து கண்களை மூடி எனது தூக்கத்திற்கு செல்கிறேன் மனது நிறைய மண்ணையும் சுழற்றிக் கொண்டு வரும் தென்றல் தழுவும் முறை என்னை அம்மா என்று அழைக்க செய்தது இந்த நிலவின் அழகில் எனது விழிகள் இரண்டும் இவ்வுலகையே உற்றுப் பார்த்தது அழகிற்கு அழகு சேர்க்கும் களங்கமில்லா நிலவே உனக்கு நிகர் எவரும் உண்டோ இந்த வையகத்தில் இவ்வளவு அழகாக அனைத்து பூக்களின் வாசனையையும் அள்ளிக்கொண்டு வந்து அனைவரின் மீதும் தெளிக்கும் உனக்கு நிகர் தான் எவரும் வர லாகுமோ நானும் உன்னை பார்க்கிறேன் உன் முகவரியை கேட்கிறேன் கிடைக்கவில்லை அதனால் மனதால் மஞ்சள் பூசுகிறேன் என்றாவது ஒருநாள் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் too soon