...

2 views

காதல் மனைவி

கனவெல்லாம் காவியமாய் கண் முன் காட்டிய நாயகனே!

பார்த்த நாள் முதல் பரவசமாய் மனதை மாற்றிய தீரனே !

கண்ட நாள் முதலாய் உன் காணொளியில் மீள முடியாமல்,

நாட்பட்ட காலமாய் ஜலம் காணா மீனைப் போல் உம் காதலில் துள்ளிய என்னை,

லாவகமாய் உம் கண்ணிலேயே பிடித்தவனே,

உம்மை திருமலாய் நெஞ்சில் துதித்த நாள் முதல்,

உம் திருமாங்கல்யம் என் ஸ்பரிசத்தை தீண்டும் நாள் வரை,

கனா கண்டவளாய் உன் கண்களில் என் இதயத்தையும்,

என் இதயத்தில் உம் ஸ்பரிசத்தையும் ஜீவிக்காத நாளும்

உண்டோ !

உம் காதல் விழிகளில்

காவியமாய் எக்கணமும் ஊஞ்சலாடும் எம் உயிரை,

உம் இதய கூட்டில் வைத்து விட்டு,

உயிரற்ற உடலாய் உம் பின்னே ,

உம் அசைவுகளிலே நித்தமும் உயிர்ப்பிக்க விரும்பும்,

என்றும் உம் காதலுக்கு உரியவளான இவள்,

உம் காதல் மனைவி"




© ❤நான் வாணி ❤