...

1 views

பெண் பிள்ளை
பிறந்தவுடன்
ஒரு ஆண்டாக
என்னை காண
ஆச்சி தாத்தா
வரவில்லை...
பெண் பிள்ளை என்று....

தந்தைக்கு பிடிக்கவில்லை...
கருப்பாக பிறந்தவுடன்....
தாய்க்கும் பயம்
எங்கே
வெறுத்து ஒதுக்கி விடுவேன்???
என அதிக அளவில்
அன்பு செலுத்தினாள் ...


முதல் பிறந்த நாள்
கொண்டாடபடவில்லை ...
அனைத்தும்
பழைய பொருட்கள்...


வயதுக்கு வந்தாள்
வீட்டில் வைத்து
தண்ணீர் ஊற்றி முடிந்த
நீராட்டு விழா...


வேலைக்கு சென்று விட்டாள்...
கை நிறைய சம்பளம்...
அரசாங்க வேலை...
ஆனாலும்
பணம் இல்லை...
குடும்ப சுமை...


கல்யாண வயது கடந்தும்
திருமணம் இல்லை
காதல் செய்ததால் ...
காதலனுடன் சேர முடிந்தும்
தயக்கம்...
பெற்றவருக்கு அவதூறான பெயர்
வரும் என்று....
இது அனைத்திற்கும் காரணம்
இரண்டாவதும்
பெண் குழந்தையாக
பிறந்தது....


வேற்றுமை வே‌ண்டா‌ம்
இரண்டாவது பெண்ணாக
பிறந்தது என் தவறா ???
இல்லை ...
கருவிலே அழித்திருந்தால்
அன்றே
இறந்திருப்பேன் ....
தினமும்
உயிரோடு அலைகிறேன்...
நடை பிணமாய்....



© JS