...

13 views

கவி- ஓர் காதல்..
காகிதத்தில் எழுதியே உன்னைக் காதலிக்கிறேன்...
காலம் முழுதும் அதையே காதல் என நினைக்கிறேன்..
உன் சுவாசத்தையே நுகர்ந்து கொள்கிறேன்..
ஆயுள் கடந்தும் அதையே மணந்து
கொள்கிறேன்..
பயணம் செய்யும் பறவையாக
பாதை தேடும் நதியாக வாழ்க்கையைக்
கடக்கிறேன்..
துளையில்லா மூங்கிலில் இசையாய்
எங்கோ ஓரிடத்தில் ஒலிக்கிராய்.
௭ன் இமைகள் காணும் கணவை
உன் கண்ணின் வழி காண செய்கிறாய்..
என் மனதில் ஊமைப் போன்ற ஒரு உணர்வு..
என் வலியின் உவமை நீயென்ற ஓர் கனவு..
உன் கற்பனையை மட்டும் கைகோர்க்கிறேன்
விலகி நின்றே உன்னை ரசிக்கிறேன்
௭னது மகுடம் ௭ன குறைந்து குறுகாமல்
பெரும் ஆழியாகவே உன்னை வர்ணிப்பேன்
சுயஉடமையாய் என்றும் எண்ணியதில்லை
கவிஞன் நீ ௭ன்றும் பொது உடமை அன்றோ…