...

10 views

காதல் அழகு

சிரித்தவுடன் புன்னகை பூத்திடும் அந்தக் கன்னக்குழி
பார்வையில் பரவசத்தை உணரச் செய்யும் விழிகள்
கைகளில் ஊசியாய் குத்திடும் குறும் தாடி
விண்ணை எட்டும் வரையில் ஆளாய் வளர்ந்த உடல்வாகு
எதிரே வந்தால் கூட பதறிப் போகிறேன்..
இந்த இரசனைகள் எல்லாம் தூர பார்வைக்கு மட்டுமே
அருகினில் வந்தால்
என் இதய துடிப்பு கூடி குறைந்து போகிறது.....
முதலாய் தோன்றும் இனம் புரியாத
அந்த தயக்கங்கள்
எல்லாம் காதலில் மிக அழகு.
© kavi kavya