...

4 views

அளவில்லா அன்பு



அளவில்லா அன்பினுள்
அடங்கித்தான் போகுதே
இவ்வுலகம்!

ஆசையில்லா உள்ளத்திலும்
அரும்பாக முளைக்குதே
உனை வாழ்த்தும் ஆசை!

மலர்ந்த பூக்களெல்லாம்
மணமாய் மணக்குதே
உன் நெஞ்சத்தில் தான்!

ஆணவம் கொண்ட விழியும்
அகிம்சை நிறத்தினுள் செல்லுதே
உன் ஸ்பரிச தீண்டலால்!

மழலையுலகம் மீண்டும்
மலருமா ஏக்க விழிகள்
உம் மழலை நாளில்
சங்கமிக்கத்தான் துடிக்குமே!

உம்மை நேசித்த சிறுப்புற்களும்
நானும் உட்பட!!

வாழ்த்துகள் இனிய தாலாட்டு தின
வாழ்த்துகள்!
வாழிய நீடிய பல்லாண்டு!!

ஸ்டெல்லாமேரி எம் ஜே
புதுவை!!