...

5 views

எண்ணம் போல் வாழ்வு
நம் எண்ணங்களை நம்மால் பூட்டி வைக்க முடியாது. இன்று இரு மடங்காக இருக்கின்ற எண்ணங்கள் நாளை ஐந்து மடங்காய் உயர்கின்றது. இந்த எண்ணங்கள் எப்படி பிறக்கின்றன? உலகில் எண்ணங்களை விதைக்காத மனிதர்கள் யார் உளர்!
நாம் காண்கின்ற காட்சிகள், படிக்கின்ற நூல்கள், கேட்கின்ற பாடல்கள், சந்திக்கின்ற மனிதர்கள்,இயற்கை, உறவுகள்,உணர்வுகள்,பொருட்கள் என எங்கு பார்த்தாலும் புதிதாக நம் எண்ணங்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கின்றன. நம் எண்ணங்களில் தான் நம் கனவுகளும் இலக்குகளும் உள்ளடங்கியுள்ளன. நம் ஆசைகள் எண்ணங்களால் தான் மிகைப்படுத்தப்படுகின்றன. நம் உணர்ச்சிகளும் அப்படி தான். நமக்கு ஒருவர் மீது காதல் ஏற்பட்டால் கூட நம் எண்ணங்கள் பலவாறு விருத்தி அடைகிறது. அவர்களுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வதும், அவர்களை பின் தொடர்ந்து செல்வதும்,நம்மை நாமே அழகாக்குகின்றோம் அல்லவா? நம் சிந்தனைகளுக்கு இன்னொரு வடிவம் கிடைத்து விடுகிறது.இதே போல் வெறுப்பு ஏற்பட்டாலும் அவரை பற்றிய எதிரான சிந்தனைச் செயற்பாடுகள் வடிவமாக்கப்படுகின்றன. இந்த எண்ணங்களுக்கு எந்த வறையறைகளும் இல்லை.
சுயாதீனமானவை. எண்ணங்களை தான் நாம் 'மனம்'என்கிறோம். சில வேளைகளில் சந்தோசத்தையும் துக்கத்தையும் எண்ணங்கள் தான் உருவாக்குகின்றன. நாம் எந்த விடயங்களை அதிகமாக எண்ணுகின்றோமோ அதன்படி நம் வாழ்வும் அமையும். நல்ல எண்ணங்கள் நம்மை கட்டாயம் மேன்மைப்படுத்தும்.அதைத் தான் எண்ணம் போல் வாழ்க்கை என்கிறார்கள்.......
© kavi Seelan