...

6 views

#உறவுகள்
ஜெனனமெடுத்த நாளிலிருந்து
ஒரு நாள் பிரிந்தாலும்
அந்நாட்கள் ஏனோ பிரிவினை உணர்த்தாத அறியா அகவை…!

ஆனால் இன்றோ
பெற்றவர்கள்
அருகிலில்லாமல்
ஒரு நாள் பிரிவும் கூட
தாங்கா துயரங்கள் தான்…!

நீண்டநாட்கள் பிரிவு
ஏனோ அன்று
பெற்றவர்களோடு
ஒன்றாக அமர்ந்து
உணவுண்ட ஞாபகமாய்
இன்று
கொல்கிறது
நெஞ்சுக்கூடு…!


தாயின் மடியை தேடி,
தந்தையின் தோளையும் தேடி,
ஏங்குகிறது பாவையவளின் நெஞ்சு…!


பதவியும்,பணமும்
வாழ்க்கையில் நிரந்தரமாயிருந்தும்
வேலை கிடைத்தயிடத்தில் பேரும்,புகழும்
தங்கினாலும் நிம்மதி
தான் ஏனோ கிடைப்பதில்லை…!


நினைத்த நினைவுகளோடு
விழியினோரத்தில்
அருவியாய் வந்து
சிந்திக்கிறது கண்ணீர்…!


உடன் பிறந்த
நான்குப்பேரும்
அவர்களின் வாழ்வை
எண்ணி வெவ்வேறு
திசையில் பயணிக்க,
நான் மட்டும் ஏன்
சிறுப்பாவையாய்
பெற்றவர்களைத் தேடுகிறேன்…!


தாயிடம் வாங்கும் வசவு,
தந்தையிடம் கிடைக்கும் கோபம்,
இருஅண்ணன்களின் தோள் சாய வலித்தப் போதும்
வெளிக்காட்டாமல் சகித்து
பொறுத்துப்போன நாட்களின் நினைவுகள் தான்
மெல்ல மெல்ல
தொலைந்துப்போனது…!


தங்கையிடம் போடும் செல்ல சண்டைகள்,
கடைக்குட்டியான உடன்பிறந்தவனிடம்
எதிர்பார்க்கும் அன்பு…!


இவையெல்லாம் நினைத்து ஏங்கி ஏங்கியே நேற்றிரவு உறக்கம் தான் கண்ணீராய் மாறிப்போனது…!


வாழ்வில் முன்னேற்றமென்பது மிகவும் முக்கியமுமொன்று.
அதை தேடி வந்தயிடத்தில்
ஏன் வந்தோமென்று
நினைக்க வைக்கிறது
பெற்றவர்களின் பாசத்தால்…!


இத்தனையும் நினைத்து
ஏங்கிப்பார்க்கும் வரை
என் முன்னாள்
இரு தமையன்களைப்
பற்றி சிந்திக்காது
இருந்த கொடுமையின்
உச்சத்தண்டனை தானோயிது…!




இருஅண்ணன்களின் பேச்சை எடுத்தாலே தந்தையின்
சினமான அகத்தை
காணவேண்டி வருமென்று
அமைதியாக இருந்தே
ஐந்து வருடங்களின்
காலம் சென்று விட்டது…!


இல்லத்தில் எப்போதோ
கிடைத்த மகிழ்வும்,
துன்பமும், இன்பமும்
நினைவின் ஆறுதலாய் அமைதியாய் தனக்கு தானே மொழித்திட,
என் உள்ளம்
அருகே
அமர்ந்தும் இருக்கிறேன்…!


வாழ்வின் கொடுமையான நாட்கள்
இரு அண்ணன்கள் என்னை விட்டு பிரித்து சென்ற நாள் தான் இன்று
என்று சொல்லிட
நடந்திட்ட நிகழ்வுகள்
பற்றி பேச தந்தைக்கு அழைத்தப்போது கிடைத்த பதில் என்னவோ வசவுகள் தான்…!


பிரிந்த உறவுகள் மீண்டும்
சேர வழி செய்திடும் போது
என்னாகும் அந்நாட்களில்
எந்நிலை…!?

கொடுமையாய்யிருந்து
இன்பமாய் மாறினாலும்
ஆச்சரியமில்லை போல…!


© ER.RANJITHA DHARA