...

10 views

தொலைத்தது
தினமும் ஒருமுறை உள்ளே தவழ்ந்து போய்வரும் வேலை மிச்சமாகட்டும் என தேடிப்பிடித்து சீப்போடு ஒரு சின்னக் கண்ணாடியையுயும் எடுத்து ஆசாரத்தில் டீவி ஸ்டாண்டில் வைத்திருந்தேன்.... தலை சீவ .....
ஆனால் இன்று அந்தக் கண்ணாடியைக் காணவில்லை....
காணவில்லை என்பதை விட நான் தேடி என் கண்ணுக்கு அது கிடைக்கவில்லை....

இங்கு இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ஒன்று அந்தக் கண்ணாடி இல்லாமல் நான் தலை வாரிக்கொள்ள முடியாது என்பதால் அந்தக் கண்ணாடி எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.... அதாவது நாம் ஒன்றை சார்ந்திருப்பதால் அது நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது ஏதோ ஒருவகையில்.... அது உயிரற்றதோ உயிருள்ளதோ எதுவாயினும்.....

இன்னொரு விடயம் இக்கண்ணாடியைத் தொலைத்து விட்டு தேடுவதைப் போலத்தான் நாம் கையில் கிடைத்த சின்னச் சின்ன மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்காமல் விட்டுவிட்டு காணவில்லை எனக்கு மட்டும் கிடைக்கவில்லை என்கிறோம்....

_- தமிழ்நிழல் ✍🏾

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#தமிழ்நிழல் #யோசிப்போம்