...

3 views

தை திருநாள் 🌾🌾🌾🌾🌾
ஆதவனின் ஒளியில் பார்த்து அதிகாலை எழும்பி பலவகை காய்கறி நறுக்கி கூட்டும் செய்திட்டு இரண்டு பானையில் அரிசி கலைந்த நீரும் பாலும் ஊற்றி அதன் கழுத்தில் மஞ்சகொத்திலும் மற்றொரு பானையில் இஞ்சி கொத்து இறுக்கி பிணைத்து அக்னி ஏற்றி வணங்கிவிட்டு இருபானைகளையும் எடுத்து தீயில் அமர்த்தி விட்டு அது பொங்கி வரும் நேரம் பொங்கலோ பொங்கல் சத்தத்தில் அழகாய் அமிழ்ந்து எழும் நேரம் அரிசியை இட்டு நன்கு இரண்டு பொங்கல் பானை வெந்ததும் சர்க்கரை பொங்கலுக்கு நெய்யில் வறுப்பட்ட முந்திரை.. திராட்சை சூடான இருக்கும் போது ஊற்றி கிளறிவெண்பொங்கல் பதமாய் தேங்காய் பூக்களை தூவி விட்டுட்டு இறக்கும் போது அதன்மனம் கவர்ந்து இழுக்க நல்ல நேரம்கேட்டு இறக்கிட மா கோலம்
இட்ட தரையில்
இலையிட்டு அதில் பொங்கல் கூட்டு இட்டு துவையல் பச்சடி செய்த வையே ஓரமாக வைத்திட்டு குத்து விளக்கேற்றி செவ்வந்தி பூக்கள் ஆங்காங்கே மங்களம் சூட பத்தி சாம்பிராணி புகையில் சூரியனுக்கு சூடத்தை ஏற்றி காண்பித்து எல்லோரும் வாழ்விலும் புதுமை புகுந்து இன்பம் நிறைந்து பொங்கட்டும் என்று வேண்டி கொண்டே சூரியனின் திருநாமத்தை உச்சரிச்சு அனைவரும் சாமி கும்பிட்டு காகத்திற்கு அன்னமிட்டு பிறகு அனைவரின் வாயிலும் சர்க்கரை பொங்கலின் நெய் மனமும் ஈர்த்து நாவில் கரையும் அந்த வேளை இதுவே போதுமே வேற என்ன வேண்டும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌼🙏🏾💐💐💐💐💐💐
© Ash(ஈசன் )