...

2 views

அவன் அழகு
என்னவென்று சொல்வது...

இரவில் நெடுஞ்சாலையில் மிளிரும் விளக்குப்போல்
இருளில் மின்மினிப்பூச்சியாய் மிளிரும் உன் கருவிழிகளை

நவிரத்தின் நுனியென நினைய வைக்கும் நின் நாசி
இளந்தென்றலோ வாடை காற்றோ என குலைய வைக்கும் உன் சுவாசம் .

ரோஜா முற்கள் குத்தும் சுகத்தை பாடிய கவிஞர்கள் உன் மோவாய் மயிர் குத்தும் சுகத்தை பாட மறந்து விட்டார்களோ

செவ்விதழை செம்பருத்திக்கு சொந்தம் என்று எண்ணியிருந்தேன், உன்
இதழ்கள் அந்த இலக்கணத்தை மாற்றி எழுதும் வரை.

முத்துகளாகவும் மணிகளாகவும் மட்டும் கண்டு பழகிய பற்கள்
உன்னிடத்தில் மட்டும் எப்படி ஹர்மோனியமாக மாறியது.

கண்ணுக்கு தென்படும் அழகினை கண்களாள் கடத்தி செல்ல கடவுளே கட்டிட கலைஞராய் மாறியது உன் கழுத்தினை படைத்தப்போது தான்.

கண்காணத மலைத்தொடர்களும்,
புழப்படத முகடுகளும்,
சாய தூண்டும் சம நிலைகளும்,
சரிய வைக்கும் பள்ளத்தாக்குகளும்,
அந்த சட்டைக்குள் மறைகிராயே

இயற்கையில் கொஞ்சப்படும் அழகுகளை, இருக்கி பிடித்திருகும் அந்த சட்டைக்குள் வந்து கொஞ்சக்கூடாதா நான்???



© preethi. T