...

8 views

காதல் மூச்சு
நெஞ்சில் சாயும் நேரம்
எந்தன் இனிமையும் உன்னுடன்
உறவாட

இதயத்தில் சேரும் உயிர் மூச்சை
மட்டும் இருவரும் பரிமாற்றம்
கொள்ள

கண்களின் பார்வையோ எந்தன்
உயிரை அடியோடு பிடுங்கி
உன்னிடம் பரிசாக்க

வார்த்தை மட்டும் மெளனமாய்
காவல் புரிய

காதல் பாவை நான் என்ன செய்வேன்?

உன்னில் தோன்றும் காதல்
என்னில் மோட்சம் பெறுகிறது
என் காதலே