...

2 views

நான் நனைந்திடும் நேரம் மழைவருமோ...!?
பெரும் மழை சுமந்திடும்
கார் முகில் கோடை...

புதிராய் புலருது
மஞ்சள் மாலை..

பெரிதொரு மூங்கில்
தரைதொடும் காற்றில்...

பறந்திடும் கூந்தல்
கதைத்திடும் கீதம்...

இதயத்தின்
அழுத்தக் கூத்தாட்டமோ....?

இடைவிடா மழையின்
போராட்டமோ....?

படபட சடசட..
சடசட படபட...

கேக்குது காதில்
கொழுகொழு மணிகளின்
கதிராட்டமோ??

கனந்திடும்
மார் முகில் அவிழ்ந்திடுமோ...?

நான் நனைந்திட என்மேல்
விழுந்திடுமோ...?

உச்சிமுகடதில்
சிறகினை விரித்தே...

நான் பறந்திடும் நேரம்
புயல் வருமோ..?

நேற்றைய நிழலும்
நாளையப் பொழுதும்

நினைத்திட நேரில்
நிசம் வருமோ...?

நிசமது கடந்திட்டு
துனைந்திடும்...