...

9 views

காத்திருப்பு!
காத்திருக்கிறேன்...காத்திருக்கிறேன்!
என் உயிர் உனைத் தேட...
என் மனம் உனை நாட...
என் உள்ளம் வாட...
காத்திருக்கிறேன்!
கண்கள் உறக்கம் காணாது...
இதயம் துடிப்பே இல்லாது...
நேரம் நகர்ந்தே செல்லாது...
காத்திருக்கிறேன்!
தொலை தூரத்தில் நீ...
வெயில் பட காயும் பனி...
நான் ஆனேன் தனி...
இருந்தும்... காத்திருக்கிறேன்!
உனக்காக... நமக்காக...
காத்திருக்கிறேன்!
உன் இன்மை வலிக்கும்போதும்...
என் தவிப்பு தொடரும் போதும்...
காத்திருக்கிறேன்!
நீ எனக்காக இல்லை நமக்காக வருவாய் என்று!


© kookoo