...

13 views

வேண்டும்
உரிமை வேண்டும்
அதை வெல்ல உறுதி வேண்டும்

காதல் வேண்டும்
அது நிலைக்க
வாழ்வில் உனக்கென ஓர் நிலை வேண்டும்

அன்பு வேண்டும்
அது பிறர் அறியா வண்ணம் இருக்க வேண்டும்

வெற்றி வேண்டும்
அதை பெற
தோல்வி படியை கடக்க வேண்டும்

மகிழ்ச்சி வேண்டும்
சில சமயம்
நினைவாக அழுகையும் வேண்டும்

பணம் வேண்டும்
அதனுடன் பிறர் பாசமும் வேண்டும்

கல்வி வேண்டும்
அதனுடன் கடவுளுக்கே கிடைக்காத
நட்பும் வேண்டும்

சொர்கம் வேண்டும்
அதை விட பெரிதான என் பெற்றோர் என்றும் என்னுடன் இருக்க வேண்டும்

எல்லாம் வேண்டும்
அனால்
அது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.