...

5 views

சதுர்த்தி விநாயகர்


விநாயகர் சதுர்த்தி விரதம்..!!


🙏 விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம்.

🙏 அந்த வகையில் இந்த வருடம் (2022) விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 15ஆம் தேதி (நாளை) ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வருகிறது.

விரதமிருக்கும் முறை :

🙏 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

🙏 சு+ரியன் உதிக்கும் முன் பால் பழம் அருந்தி, மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

🙏 விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையை தொடங்க வேண்டும்.

🙏 அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

🙏 மாலை விநாயகருக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை படைத்து, பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம்.

🙏 விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல் மிகவும் நல்லது.

🙏 சதுர்த்தி திதியில் ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் இவ்விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.

🙏 விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தௌpந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.

🙏 பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.

நெய்வேத்தியம் :

🙏 இந்த விரதத்தின்போது செய்யும் பூஜை படையலில் நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

நன்மைகள் :

🙏 விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும்.

🙏 அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர்.

🙏 அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள் நீங்கும்.

🙏 வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.

🙏 வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும்.

🙏துன்பங்கள் விலகி இன்பம் பெற... வினை தீர்க்கும் விநாயகரை நாளை விரதமிருந்து வழிபடுங்கள்...!!🙏