...

9 views

காற்றுக்கென்ன வேலி
இப்பொழுதும் நீயாக
வரலாம் வாசிக்க...

கடலுக்கும் மலைக்கும்
இடையே பெருநதியாய்
நம்மிருவர் மௌனம்.

கடல்காற்று உன் மனதில்
நாம் நடந்த பாதைகளை
சொல்லிக்கொண்டிருக்க..

மலைக்காற்று தூறலில்
சிதைந்து அலைகிறது.

கிளை விட்ட தனிமையில்
உன்னிடம் உனக்குள்
என்ன பேசுகிறாய்?
இப்போதும் தெரியாது.

வெறுக்க வெறுக்க
நினைக்கவே விரும்பும்
அந்த மனதுக்குள்...

நான் கேட்ட முத்தம்
மேகமாய் தவழ்வதை
நீதான் காணவியலும்.

நாம் இணைந்து
முயற்சித்து
நம்மையே வெறுக்க...

வெற்றியில் இனிதே
அது முடியலாம்.

நம்மைநாமே வேகமாய்
இறுக்கும் பொழுதில்
எளிதில் உடைவோம்.

ஒருவேளை இன்று...

மலைக்காற்று இரவில்
உன்னோடு பேசலாம்...

ஒற்றை பாடகனின்
இரவை
தனிமை
திருடிப்போகும் கதையை.

கடல்காற்று என்னிடம்
முத்தம் என்பது
கொலை அல்ல என்றதை.

கடலும் மலையும்
நிலத்தில் கொஞ்சி
தம்முள்
கலக்கும் என்றானால்....

காற்றுக்கென்ன வேலி?





© sparisan