...

4 views

📚 வாசிப்பு வசியன் 📚
மின் புத்தகம் தாண்டிய பாதையில் மாறும் விலகா பயங்களின் பணயம் புதிதாய் பூக்கும் பூக்கள் போன்று நூல் நுழைந்து கையில் பனுவல் பங்கிடும் பிரதிகளை ஒவ்வொன்றாய் நகரந்து செல்லும்
சீராய் சீரும் எழுத்துக்களின் குவியல்கள் குழல் போல் கருமையில் ஆதிக்கம் ஆளை அமிழ்த்தும்
கருவிழியில் கிறுக்கு கவ்விகொண்டு பிடிக்கும் பித்தம் ஒன்றையே மீண்டும் மீண்டும் மனதும் மூளையும் விரும்பும் விலகிடா விரல்களின் பக்கங்கள் ஒன்று இரண்டு என்று கணக்கில்லாது கனவுகள் முழுவதும் ஆளுமை பெற்று கொள்ளும்
புரண்ட பிரதியிட்ட தாள்கள் புழுங்கிடும் பூ மனம் மெல்ல அவன் வாசம் நாசியில் ஏறிடும் நித்தம் நித்தம் நீல வானம் போல் இறங்கா பயணம் பாங்காய் அவனின் கரும்பூக்களின் தோட்டத்தில் ஓராயிரம் தடவயேனும் தஞ்சம் புகுவேன் உள்ளத்தின் வெறுமைதனை வென்று விடுகிறது எனது பழைய புத்தகங்களின் வாசிப்பு முடிவிலியாய் அவனின் கைகள் கோர்த்துக்கொண்டு சென்றிடும் காலங்களை கேட்கிறேன். வாசிப்பு வசியனே
வணக்கம் 🌼🙏
அநபாயன்🤍
💫📚
© Ash(ஈசன் )