...

11 views

விதைத்தது மட்டுமல்ல முளைக்காததும் கூட முளைப்பவைக்கும் முனைபவைக்கும் அடிப்படையே!!!!
எழுத்து என்பது தன்னில் இருந்து உருவாவதே.... தான் பார்த்த , தான் கேட்ட , தான் அனுபவித்த,தன்னை நெருக்கிய,இப்படித் தன்னைப் பிழிந்தெடுத்து, தன்னைப் பிளவுபடுத்தும் அல்லது பிரியப்படுத்தும் ஏதேனும் ஒன்றிலிருந்து வழிவது எழுத்து.... ஆனால் எண்ணங்களாக இவை எந்தெந்த வழியிலோ போய் ஒட்டிக் கொண்டு போதும் அவை எழுத்தாகும் போது தான் கட்டமைக்க விரும்பும் அல்லது தான் பார்க்க விரும்பும் ஒரு சமூகத்தையோ கருத்தையோ தான் பிறரின் கண்ணுக்கு சிந்தனை விருந்தாக்குகிறது நமது எழுத்து......

அதற்காக எழுத்தாளன் எழுதிய எல்லாவற்றையும் இன்றோ அல்லது அன்றோ குறிப்பாக அந்த ஒன்றைப் பார்த்ததாலேயே ,கேட்டதாலேயே , செய்ததாலேயே அதை அவன் அப்படி எழுதினான், அதற்குக் காரணம் அதுதான் என்றும் உறுதியாகச் சுட்டிக் சொல்லி விடவே முடியாது....

கலப்பு உரத்தைக் காட்டில் வீசிவிட்டு அதில் கலந்துள்ள கால்சியத்தினால் மட்டுமே பயிர் நன்றாக கால் பிடித்து வளர்ந்துள்ளது என்று கூறுவது சரியாகுமா.....?

ஏனெனில்

எண்ணத்தில் உதிப்பவை ஏராளம் எழுது! எழுது! என்று நச்சரிப்பவை இன்னும் பலப் பல!! ஆனாலும் சூழல் காரணமாக ஏட்டில் உருப் பெறக்கூடியவை மிகச் சிலவே....

இப்படி எத்தனையோ பேருக்கு எத்தனையோ தருணங்கள் இருக்கலாம் அதாவது உள் விளைந்தும் உருப்பெறாமல் போனவை.... ஆனால் வெளிவரும் ஒவ்வொரு எழுத்துக்கும் இவையெல்லாம் அடித்தளமாவே அமையும்.....

விதைத்துக்கொண்டே வருபவை எல்லாவற்றிருந்தும் விளையாத வரிகள் ஒவ்வொன்றுமே கூட
விளைந்த வரிகளுக்கு அடிப்படையாக அமையலாம்...

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#தமிழ்நிழல் #தமிழ்க்கவிதைகள் #thoughts