...

4 views

எல்லாமே.. எல்லாமாய்..
எண்ணம் எல்லாம்
எழுத்து எல்லாம்
ஏட்டு எல்லாம்
கற்பனை எல்லாம்

கவிதை எல்லாம்
கனவு எல்லாம்
காட்சி எல்லாம்
கண்ணுள் எல்லாம்

சிந்தை எல்லாம்
சிற்பம் எல்லாம்
சிகரம் எல்லாம்
சிறப்பு எல்லாம்

வானம் எல்லாம்
கானம் எல்லாம்
பாடல் எல்லாம்
பாதை எல்லாம்

மேகம் எல்லாம்
மேன்மை எல்லாம்
மேடை எல்லாம்
மேனி எல்லாம்

வண்ணம் எல்லாம்
வானவில் எல்லாம்
வாகை எல்லாம்
வாழ்வு எல்லாம்

ஆற்றில் எல்லாம்
அருவி எல்லாம்
அலைகள் எல்லாம்
ஆற்றல் எல்லாம்

கடலில் எல்லாம்
கரையில் எல்லாம்
மணலில் எல்லாம்
நுரையில் எல்லாம்

மழையாய் எல்லாம்
மடங்காய் எல்லாம்
மின்னல் எல்லாம்
வெளிச்சம் எல்லாம்

பகலில் எல்லாம்
இருளில் எல்லாம்
பனியில் எல்லாம்
பணியில் எல்லாம்

நிலவில் எல்லாம்
நிலத்தில் எல்லாம்
களத்தில் எல்லாம்
குளத்தில் எல்லாம்

வெயிலில் எல்லாம்
வெளியில் எல்லாம்
வெண்மை எல்லாம்
வெற்றி எல்லாம்

பொறுமை எல்லாம்
பொருளில் எல்லாம்
பொருளாய் எல்லாம்
வெறுமை எல்லாம்

மனதில் எல்லாம்
மடலில் எல்லாம்
வரவே எல்லாம்
வளமாய் எல்லாம்

எல்லாமும் எல்லாமாய்
எந்தன் எல்லாமே
எப்போது எல்லாமாய்
வருவாயோ எல்லாமே..

© CG Kumaran