...

9 views

மௌனம் பேசியதே..

இடியே இடித்தாலும்
ஈடுகுடுக்கும் நெஞ்சமது
பஞ்சையொத்து பதமாய்
பாதை மாறுதடி..
பைங்கிளி உந்தன்
பால்முகம் காண..

உன் கொஞ்சுமொழி
கேளாமல் நாட்களும்
நகர மறுக்குதடி
எந்தன் தேனமுதே..
என்னை சாயந்தே
சாய்க்காமல் சாய்த்தவளே..

உன் அரும்புன்னகை
வேண்டுமடி இவன்
வாழ்வை இனிதேதொடர..
அதன் சைகைமொழிகள்
கூட்டுமடி எழிலைநம்
வாழ்வினிலே என்றும்..

கோப பார்வையதும்
செல்ல சண்டைகளும்...