கிழவியின் மரணம்
சரியாக சொன்னால் அன்றுடன்
முடிவுக்கு வந்தது அந்த கிழவன்
கிழவிக்குமான ஐம்பத்திஏழு ஆண்டு
காலம் வளர்த்திருந்த இல்லரம்..
ஆமாம் இன்று அந்த கிழவி இறந்து
விட்டாள்.பெரிதாக ஒன்றும் நோய்
ஏதுமில்லாமல் வயதில்
முதி்ர்ச்சியால் வந்த இறப்பு..
ஐஸ்பெட்டிக்குள் இருந்த அவளை
சுற்றி நின்று அழுதிட இரண்டு
மகன்,இரண்டு மகள்,மருமகன்
மருமகள் பேரப்பிள்ளைகள் என்று
நிறைவான வாழ்க்கைதான்..
தூரமாய் அமர்ந்தபடி அந்த ஐஸ்
பெட்டியை வைத்தகண் வாங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தான் கிழவன்..
கண்களில் ஒரு சொட்டு நீர்கூட
வருவதாக இல்லை.சில அதிகபடி
சோகங்கள் கண்ணீரில் வருவதில்லையே..
லேசாக அவன் கண்கள் மூடிட அந்த
ஐம்பத்தேழு ஆண்டுகள் பின்னே
சென்று விரிந்தது அவனுக்கு..
பெரிதாக காதலென்று ஏதுமில்லை,
இன்னும் தெளிவாக கூறுவதென்றால்
அந்த கிழவியும் கிழவனும் முதன்முறை
சந்தித்ததே அவர்கள் திருமணத்தில்தான்
இளம்வயதில் சற்று முறுக்கேறிய
தேகம்தான் அந்த கிழவனுக்கு.அதை
ரசிக்காமல் இல்லை அந்த கிழவியும்..
பொழுதுபோக்கென்று பெரிதாய்
ஏதுமில்லா அந்த காலத்தில் ஒரேயொரு
பொழுதுபோக்கே..அதன் விளைவாய்
அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள்..
எழுபதுகளின் கிராமபுரம் என்றானதால்
ஆணாதிக்கம் சற்று தூக்கலாகவே
இருந்திருக்கும்.அதற்கு அந்த
கிழவனும் விதிவிலக்கல்ல..
குடிப்பதும்..குடித்துவிட்டு அடிப்பதும்
இயல்பான நிகழ்வாகி அதற்கு
அவளும் பழகிக்கொண்டாள்..
அடிக்கிற கை தான் அணைக்கும்
என்ற பழமொழியெல்லாம் அந்த
காலகட்டத்தின் கண்டெடுக்கபட்டது
போல..இவர்களும் அப்படியே..
இருந்தும் ஒரு முறை வன்முறை
வரம்புமீறி ஆஸ்பத்திரி அவளை
அழைத்துக்கொள்ளும் நிலை...
ஒருமாத ஆஸ்பத்திரி வாசம் ...