...

1 views

இசை, அதற்கு நீ இசை..
இசை என்பது
இனிய ஓசை என்பதன் சுருக்கமே!

இனிய என்ற சொல்லின் முதலெழுத்தும்
ஓசை என்ற சொல்லின் இறுதி எழுத்தும்
இணைத்து அமைக்கப்பட்டதே இந்த
இசை என்கிற சொல்லாகும்!

இசையென்றால் சம்மதி, ஒத்துக்கொள்,
இசைவு கொள் என்று பொருள்படும்!
இசை, அதற்கு நீ இசை - இசைக்கு
இசையாதான் வசைக்கே ஆளாவான்!

இயற்கையோடும், இச்சமூகத்தோடும்
இசைந்த வாழ்க்கைக்கு இசையே ஆதாரம்!
இனிய இசை ஒவ்வொரு மனிதனுக்கும்
இசைவு மனப்பான்மையை கொடுக்கவல்லது!

இசையை நேசிப்பவர்களே உலகெங்கும்
இனியவர்களாக வலம் வருகிறார்கள்!
இசையை வெறுக்கும் குணமுடையவர்களே
இன்று சமூகவிரோதியாக வலம் வருகிறார்கள்!

மா. ஷங்கர்.