...

1 views

விடைபெறும் ஆசிரியமொன்று.....
தமிழுக்கும் அமுதுக்கும் ஒரு
முடிச்சுள்ளதை முழுசாக
இன்பத் தமிழ் கமழும் நா கொண்டு
அறியச் செய்த அறிவின் வேர் நீரு.....

யாழ்ப்பாண மண்வாசனையை
களுத்துறை வளிமண்டலத்தில்
தாய்மொழியாய் தவழவிட்ட
தமிழ்த்தாய் நீங்களன்றி யாரு...

நெட்டாங்கு அலைகளில்
உயிரெழுத்துக்களையும் தமிழ்
மெய்யெழுத்துக்களையும் கலந்து
பருகச் செய்த பக்குவமே வேறு..

வல்லினங்களின் வீச்சத்தில்
மெல்லினங்கள் சுருதி மறக்குமோ
என்று எங்களுக்குள் சந்தேகம்
எழவிடாமல் பேசும் சாமர்த்தியமே நூறு....

காலச் சக்கரங்கள் வேகமெடுத்து
அகவைகள் பாலில் நழுவிய
பழங்கள் போல கண்ணெதிரே
சட்டென்று வந்து நின்ற விதி மீற நாம யாரு....

மாணாக்கர் மதி தெளிய மருந்தாக
தேனாக தமிழ் மொழியை கொட்டும்
நீர் வீழ்ச்சி போல கற்பனையில்
திகட்டாமல் திணறடிக்கும் திறன் வேறு.....

கேள்விகள் ஆயிரம் தொக்கு நிற்கும்
கலிகால யுகமொன்றில் மூன்று
தசாப்தம் தமிழை மகிழ்வித்த தாயே
தயங்கி விடைபெறும் வலி இன்று கூறு....

பழகும் தோழமையும் பணிவும்
பாசமும் நற்பண்புகள் பல சேர்ந்து
ஒரு தாயின் பாசம் மிளிரும் முகம் பூக்க
இனி காண வருவாரோ சூரியமகளாரு!


© siriuspoetry