...

8 views

நீண்ட நேர உரையாடல்
மறந்து போகிறேன் தினம் தினம் உன்னிடம் பேச
கைபேசி இருவரும் ஒவ்வொரு பக்கம் தூக்கி வீச, அனைத்தும் மறந்து
ஒரு இரவு நீ அங்கே நான் இங்கே
மயக்கம் கொண்டு நித்திரை கொள்கையில்,
கனவும் நீ!
களைந்திட நினைக்கும் பொழுதில் ஆழமாய் மனதில் நீ இருக்க,
மௌனம் களைத்தே என் காதல் உன்னிடம் வர்ணிக்க முயல்கிறேன்,

அறியேன் நான் உன் மனம் என்ன என்று, ஏற்குமோ மறுக்குமோ,
மௌனம் கொண்டு மன காயம் ஆகுமா
வார்த்தைகள் கொண்டு வரம் ஆக கிடைப்பாயா,

நீண்ட உரையாடல் என் மனதில் உன்னை நினைத்து இத்தனை காலங்கள்,

பல நாட்கள் கண்கள் கண்ணீரில் இருக்க
கதைகள் யாவும் உண்மை தான் நானும் உன் நினைவுகள் கொண்டே மரணம் காண்பேன் என என்னை நானே தேற்றி கொண்டு இருக்க.

ஒரு நாள் குருட்டு தைரியம் வரவே:

இதை உனக்காக எழுதுகிறேன்.

உன் விரல் பிடித்து உன் கரம் கோர்த்து
உன்னை என் மனதில் ஆழ்த்தி
என்னை நானே உன் கண்களில் காண,
என்னுள் புதைந்த மொத்த காதலும் உன் பாதம் சென்றடைய என்னை உனக்கே அற்பணித்தேன்


© அருள்மொழி வேந்தன்