...

3 views

கடவுள்
கடந்து போகும் கடவுள்
-----------------------------------
கடவுள் எங்கே
இருக்கிறார்!
எதிலே கலந்து
இருக்கிறார்!
மதத்தில் கலந்து இருக்கிறாரா இல்லை ஜாதியில் கலந்து இருக்கிறாரா இல்லை மொழியில் கலந்து இருக்கிறாரா இல்லை
இயற்கையில் கலந்து இருக்கிறாரா இல்லை விண்ணில் அமர்ந்து இருக்கிறாரா இல்லை
பஞ்ச பூதங்களில் கலந்து இருக்கிறாரா இல்லை ரகசியமாக கவனித்து கொண்டு இருக்கிறாரா என்பதை ஒரு
விடையில்ல கேள்வி?
நன்மை செய்வவருக்கு துணை இருக்கிறாரா இல்லை தீமை செய்வவருக்கு
துணை இருக்கிறாரா!
பாலியல் நடக்கும்போது காணாமல் கடந்து போகிறார் கடவுள்!
கொலைகள் நடக்கும் போதும் கடந்து போகிறார்!
நல்லவர்களை
காக்கவும் வரவில்லை!
கெட்டவர்களை
தாக்கவும் வரவில்லை!
ஒரு காலத்தில் அசுரர்களை வதம் செய்த கடவுள் இன்றைய அசுரர்களை எதுவும் செய்யாமல்
கடந்து போவது ஏனோ தெரியவில்லை!
கடவுள் இருப்பது உண்மையா என்பது புரியவில்லை!
(ஹரிபார்வதி)