...

19 views

இல்லாள்
சலவை
இயந்திரத்தைப் பழுது
நீக்குபவன்..

என்று
தன் மனதைச்
சலவை செய்து
பழுது நீக்குவான்?

படித்த பெண்ணைத்
திருமணம் செய்கிறான் தனக்குப் பிடித்தது
போல் மட்டும்
நடக்கவும் சொல்கிறான்

இயந்திரப் பொத்தானைச்
சொடுக்குவது போல்
இணையாளையும்
இயங்கச் சொல்வது
இழிகுணமன்றோ!

தாங்கிக் கொண்டாள்
தயங்கி நின்றாள்
எதிர்பார்ப்பை
விட்டுவிட்டாள்..

இயந்திரம் போல்
வாழ்வதாலே
அவள் வீட்டில்
அர்த்தப்பட்டாள்.

இவர்கள் பார்வையில்
இல்லாள் உணர்வு உரிமை இல்லாதவள்..

© யாமினி மழையினி