...

1 views

புத்தாண்டு வாழ்த்துகள்
பட்டாடை உடுத்துங்கடி
பட்டாசை கொலுத்துங்கடி
வண்ண ஜாலங்களை ஏவுங்கடி
வானத்தில் வண்ணமேற்றி மகிழுங்கடி

புது ஆண்டு பிறக்கின்றாள்
புன்னகையோடு வாழ்த்துங்கடி
புது வசந்தகாலம் பிறக்கின்றாள்
பூத்தூவி வரவேற்பு வழங்குங்கடி

இன்பங்கள் பிறக்கட்டும்
இனிப்புகளை பரிமாறுங்கடி
இன்னல்கள் விலகட்டும்
இல்லத்தில் விளக்கேற்றுங்கடி

பிறக்கின்ற நல்லாண்டிற்கு ஒத்துழைப்போம்
இயற்கைகளை அழிக்காமல் பாதுகாப்போம்
நோய்கள் இல்லாமல் நலமாய்
வாழ்ந்திடுவோமென
சபதம் செய்யுங்கடி

அநீதிகளை செய்ய மாட்டோம்
ஆசைக்கு அடிபணிய மாட்டோம்
அற வழியில் பயணிப்போமென
சபதம் செய்யுங்கடி

மகிழ்ச்சி என்றும் பொங்க
மக்களின் மனம் குளிர
மண்ணில் வளம் பெறுக
மனதார வேண்டுங்கடி

புது சீற்றம் வராமல்
புயல் சேதம் தராமல்
புது நோய் உருவாகாமல்
புது ஆண்டு காத்தருளனும்

கரம் குவித்து வணங்குங்கடி
மலர்த்தூவி வாழ்த்துகளை பாடுங்கடி
புத்தாண்டு நலம் தருவாளென
புத்துணர்வோடு வாருங்கடி

சந்தோசத்தை கொண்டாடுங்கடி
சரித்திரம் படைக்க புறப்படுங்கடி
சாதனை மேல் சாதனைகளை
சாதித்துக் கொள்ள புத்தாண்டோடு
பயணத்தை தொடங்கலாம் வாருங்கடி.
-சங்கத்தமிழன்.