...

3 views

என் காதல் கனவுகள்
தனக்கு வர போகும் கணவனை எண்ணி ஆயிரம் கனவுகள் கண்டேன்.....
அனுதினமும் காதல் கடலில்
நானும் அவனும்...
மறுக்க முடியாத புரிதலோடு, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்....
அவன், என்னை செல்லப்பெயர் சொல்லி அழைக்க...
நானும் காதலோடு அவனை. ' டா ' சொல்லி அழைக்க....
இருவரும் இணைந்து கோவிலுக்கு செல்ல.....
நீ, பூ வாங்கி என் தலையில் சூட...
நீயும் நானும் கைகோர்த்து நெடுந்தூரம் நடக்க...
கடற்கரையில் இருவரின் காலடி தடங்களும் கதை பேச....
அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்க்க....
எனக்கு பிடித்த உணவை நீயே அறிந்து கொண்டு வாங்கி தர உன்னை பார்த்த படியே அதை உண்ண....
என்னுடன் இருக்கும் போது உனக்கு வரும் கைபேசி அலைபேசி அழைப்பை கூட அலட்சியம் செய்து.....
உன் கருவிழியில் என் உருவம் தெரிந்து கொண்டே இருக்க.....
என் மனதில் உன் உருவம் ஓவியமாய் மிளிர.....
நீயும் நானும் நம் காதலுடன் வாழும் வாழ்க்கையை எண்ணி கனவு கண்டு கொண்டே இருக்கிறேன்.....
கனவாக...........