...

20 views

நீயில்லாமல்.....திருநாள் மட்டுமே...?!
விடியலில் எழுப்பி..
படியாத பரட்டைத் தலையில்
எண்ணெயைத் தேய்த்து
வெந்நீரால் நீராட்டி..
புத்தாடை அணிவித்து..
அணையாத அடுப்படியில்..
சலிக்காமல் செய்த
பலகாரங்களை...
தான் உண்ணாமல்
எனக்களித்து..
உண்ணும் மகனை ரசிக்கையில்
அவசரமாய் வந்த விக்கலையும் அமர்த்திட..
செல்லமாய்த் தலையில் தட்டி
வெல்லமென இனித்திட்ட அன்னையே...
உன்னை விடவா இனிப்பு வேண்டும்..!
'தாயுமானவனை'ப்போல்
'தந்தையுமானவள்' நீ....!
எமைப்பிரிந்து
விண்ணுலகம் சென்று
எந்தையுடன் கலந்தாயோ..
நீயில்லாது திருநாள் மட்டும்
வந்துபோகிறது..
வருடாவருடம்..!