...

5 views

எனது இன்று
எனது காலை கதிரவன் காரினும் இருண்டது இன்று.

நான் உடல் பயின்றும் வலு குறைந்தது இன்று.

குளித்து முடித்தேனா என குழம்பிப்போனேன் இன்று.

அன்னம் அருந்தி அருந்தி அயர்ந்துப்போனேன் இன்று.

என்றும் செல்லும் பாதை நெடுகிலும்
முட்களின் சோலைகள் இன்று.

வேலை செய்யும் விரல்கள் அனைத்துமே விடுமுறை கேட்குது இன்று.

கரைந்து உண்ணும் காகம் அனைத்தும் கா விட்டு சென்றது இன்று.

காலை நேரத்து குளிர்ந்த காற்று அனலென உணருது இன்று.

செல்ல நாயின் சிறு சிறு சீன்டல்கள் சீ என தெறிந்தது இன்று.

நெட்பிளிக்சின் நிகழ்சிகள் அனைத்தும் நித்தம் தெகிட்டின இன்று.

சமூக வலைதலம் நெடிகிலும் உந்தன் பக்கத்தை தேடினேன் இன்று.

நெஞ்செல்லாம் ஏதோ ஒரு பாரம் நித்தம் நிலைக்கொண்டது இன்று.

உன் இருப்பிடம் தேடி கண்கள் இரண்டும் அலைந்துக் கொண்டிருந்தது இன்று.

கண்கள் அயர்ந்தால் உன் கவின்மிகு முகம் காட்சிப்பெருக் கெடுத்தது இன்று.

காதருகில் உன் காந்தக் குரல் கவித்தனை இசைத்தது இன்று.

உன்னை காணாத ஒரு நாள் ஒரு யுகமாய் கடந்தது இன்று.
© gowieeie