...

4 views

காதல் கத்திரிக்காய்
காதல் கத்திரிக்காய் தான்
நம்மை வெறுப்பிலிருந்து
கத்திரிக்கும்
நம்மை அப்பன்
ஆத்தாவிலிருந்து கத்திரிக்கும்
பசியிலிருந்து, தூக்கத்திலிருந்து,
தொய்விலிருந்து
நண்பர்களிலிருந்து
இந்த நிஜ உலகிலிருந்து
கத்திரித்து, கத்திரித்து…
அவளொன்றே என்று
காத்திருக்க வைக்கும் காய்
நாம்மை காய விடும் காய்
ஆனால்
நண்பர்களே
ஒரு உண்மை
கத்திரிக்காய் உண்மையில் காயில்லை…
மலரிலிருந்து உருவாகும்
கனி… துவர்ப்புக் கனி
கத்திரித்து, கத்திரித்து
நம்மை திருத்தி, திரிக்கும் கனி.
கசப்பிலும் இனிக்கும் கனி..
நம்மை ஒருமனதாக்கி
மோட்சம் கொடுக்கும்
கத்திரிக் கனி…😀
ஹிஹி..


© clayppr