...

25 views

பனியின் மரணம்...
ஆகாயத்திற்கு ஏற்பட்ட
'குளிர்காய்ச்சல்'
பூமிக்கு பரவி
புல்வெளிகளை..
ஆக்கிரமித்தது
பனித்துளிகளாய்..!
இரவில் ஆதவன்
ஒளியிழந்த
புல்நுனிகள்
'பனிக்காய்ச்சலா'ல்
பாதிக்கப்பட..
காலை
உதயக்
கதிரவனின்..
கிரணம்
தீண்டியதால்
வெப்பக்
கணைகளின்
தாக்குதலில்
..ஆவியாகி
மரித்தன...
பனித்துளிகள்..
தாம் அமர்ந்த
புல்மேடையே..
கல்லறையாக..!
அந்திமாலையில்..
பிரியாவிடையுடன்
கதிரவன் பூமியை..
ஏக்கமுடன் நீங்க..
இரவுப்பணியாற்ற
வெண்ணிலா வானில்
உதயம்..!






© SrinivasRaghu