...

8 views

அவள்களின் துயர்!
தரையையே பார்க்கும் முகம்....
நானத்தைத் தாண்டி
தயக்கத்தையும் தாங்கிருக்குமோ!
வளைவுகள் இருப்பது
வர்ணிப்பதைத் தாண்டி
வளைந்து
கொடுக்கவும் தானோ!
ஒப்பனைகள் அழகு என்றில்லாமல்
அழுகைகளை
மறைக்கவும் தானோ!
மௌனம் குணத்தின்
பாகமாய் இல்லாமல்
கோவத்தின்
சிதறல்கள் தானோ!
அன்றாட வலிகளைத் தாண்டி
உணர்வுகளை ஒதுக்கி
பெண்ணியமென்ற
சொல்லை பயன்படுத்த
வழியில்லாது....
போகும் போக்கில்
வாழ்க்கை!...என்ற
வட்டத்தை உடைக்க மறுத்து
பிழைக்கும் பிழைப்பை
பொறுமை என்பாளோ?
பொங்கினால் பூகம்பம் வாசம்
வீசுமென்று நகைகளைப்
போல்...புன்னகையையும்
போட்டு பூசி சிரிக்க...
துணைக்கு இனிமையான
வார்த்தைகளும் புணர்ந்தனவே....!

© kookoo