...

5 views

சவாரிக்கும் ஓவியன்
அல்லும் பகலும்
அழகை பொழிபவள்
தாவணியாய் தழைகளை
போர்த்தினாள்
வெண்பனியில் வெட்கம்
கசிய - ஏனோ சுடுவெயிலாய்
மிஞ்சி மறைக்கிறாள்!
குக்கூ... கீ... கீ....என்று ராகம்
பாடி வசைக்குள் வசமாக்கி
அமைதியென்ற ஆழத்தில்
சிறை வைக்கிறாள்!
பிராணியென பாவித்து
மாந்தர்களை அரவனைத்து - கை
நீட்டி வா என்று பார்த்து காத்திருக்கவே....
துயரங்கள் தூரமாக
பயணங்கள் பாலமாய் கொண்டு
வலிகள் மறைக்க வழிகள் தேடி
திகட்டாத நினைவுகளுடன்
உலகை உணர உன்னதம் அரிய
மனம் என்ற கையேடுடன்
கூட்டு குருவிகளாய் தோழமைகளும்
துவிச்சக்கரத்தில்(bike) வானம்பாடியாய்
ஒவியனென்ற ஒற்றை அடையாளத்தில்
#நானும்❤️
© சீதளா செ🌺