...

24 views

கனவு காதலியை தேடி😍😜
#என்காதல்ராட்சஷி

கனவு காதலியின்
காதல் பயணத்தில்

அதிகாலை நேரம்
நிசப்தம் குறைந்து
சேவலின் கூவல்
பறவைகளின்
சங்கீதம்
தென்னை மரங்களின்
மெல்லிய
சலசலப்பு
ஒற்றை
ஓலை குடிசையில்
காதல் பறவைகளாய்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
அன்பின் பிணைப்பில்..,

ஆழ்ந்த உறக்கம் கலைத்து
இமைகளை
சற்றே விலக்கிட
துடிக்கிறது
விழிகள்

என் மார்பில்
மழலையாய் உறங்கிடும்
உன்னை அள்ளியணைத்து
நெற்றிப்பொட்டில்
என்னிதழ் பதித்து
முத்தமிட்டு
இமைவிழித்து
உனதழகை கண்டு
உன்னை
எனக்காய் படைத்து
இவ்வுலகை
எனக்குள் அடக்கிய
இறைவனை வணங்கி
புதிய விடியலை
தினம் தினம் காண்கிறேன்..,

மெல்ல எழுந்து
உன் துயில் கலைக்காமல் நகர்ந்து
உனது பணிகளை
நீ எழுமுன் முடித்து
சூடான தேனிர் குடுவையுடன்
எந்தன் உயிரான
உன்னை அள்ளியணைத்து
கொஞ்சலும் மிஞ்ச
சில முத்தங்கள் கொடுத்து
உன்னிதழ் பருகிடும்
தேனீர் சுவையினை
என்னிதழ் ருசித்திடும்
செவ்விதழ்...