...

4 views

எதிர்ப்பு
எத்தனை வண்டிகளில்
எத்தனை தடவைகள் [trip]
ஏற்றிச்செல்வது_
இத்தனை பரப்பில் இருக்கும்
இவ்வளவு வைக்கோலை?
- என்று சிந்தித்தவன்
எவனோ ஒருவனின் மூளை!

இரட்டை மாட்டு வண்டிக்காரனின்
வாழ்வாதாரம் என்ன ஆவது?
- என்று சங்கம் அமைத்து
மைக் வைத்து போராட்டம் செய்கிறார்கள்_

போக்குவரத்துக்கு பயன்படுத்தாமல்
எவ்வளவு தூரம்
எவ்வளவு நேரம் பயணிப்பது?
-என்று
ஒற்றை மாட்டுவண்டிக்காரன்
குதிரை வண்டிக்காரனின்
வாழ்வாதாரத்தை வசதி(யாக)க்காக
மறைத்து மறந்து விட்டு

ஏரோப்பிளானில் வந்து
ரிசார்ட்டில் தங்கி
LandRover-ல் வந்து இறங்கி
தலைமை ஏற்கும்
அரசியல்வாதிகள்
🤫

© iAmRangz