...

10 views

அண்ணாந்தபடி துப்பு !
எட்டு மணி நேரத்தை
விலைக்கு
வாங்கியவன் முதலாளி !

அதற்காக,

தெரிந்தோ,
தெரியாமலோ,
போக்குவரத்து நேரத்தை
இலவசமாக
வழங்கிவிட்டான்

தொழிலாளி !

இதில் ,
ஏதாவது நியாயம் உள்ளதா?
இதை,
மறுபரிசீலனை செய்ய வேண்டாமா?

இதிலிருந்து தான்
பிறக்கிறது,
சமூக அந்தஸ்து
பாகுபாடுகள் !

........."........."..........."..............."............."....

எவ்வொரு
குறையுமில்லாத சட்ட திட்டம்
வகுத்து வழங்க
ஐந்து நிமிடம் கூட
இல்லாதவன்

அதிகாரி !

அதனால்,

வீடு கட்டவும்
வாகனம் வாங்கவும்
கடன் கேட்டு
வங்கி வாசலில்
வரிசை கட்டி
நிற்கிறான்

உழைப்பாளி !

இதில் ,

வரிக் காசில் சம்பளம் வாங்கும்,
அதிகாரிக்கு எக்கச்சக்க -
இலவசம் !
குறையாத ஓய்வூதியம் !

எவ்வளவு பாரபட்சம் பார் !

...........x.........x...............x............x...........

கடன் கொடுத்து
வட்டி சம்பாதிக்கும்
பணக்காரனுக்கு
வாழ்க்கையளிக்கும்
வள்ளல்

அரசியல்வாதி !

எக்கேடு யார் கெட்டால்
எனக்கென்ன ?
நான் உண்டு
என் வேலையுண்டு
என்றிருக்கிறவன்

சாமானியன் !

அரசியல்வாதி !
சாமானியன் !
இவர்கள்,
இருவருக்கும் இடையே
மத்தளமாய்
இருபுறமும் அடிவாங்குபவன்

புரட்சிக்காரன் !

இந்த,
பாவப்பட்ட பிறவியின்
நிம்மதிக்குப் பாவப்பட்டுப்
படியளக்க எத்தனை நபர்கள்
தயார்?
...........x..........x........x.........x.........x..........

தொழிலாளி பாதி-முதலாளி பாதி - சேர்த்து - செய்த - கலவை

அமைச்சர்கள் !

அவர்கள் எண்ணப்படி,
மக்கள்தொகை கணக்கேட்டிலுள்ள ஒரு எண் மட்டுமே உரிமையுள்ள

குடிமக்கள் !

இதில்,
கும்பிட்டு குட்டுவைப்பவர்கள்
கூட்டத்திற்கு
வக்காலத்து வாங்கும் ஒருவராவது உங்கள் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவராக
இருப்பார் !


புரிகிறதா?

நாட்டு நண்டுகளே !
இனியாவது மேடேறப் பாருங்கள் !
அண்ணாந்து பார்த்து
துப்பிக் கொள்ளாதீர்கள் !

© s lucas