...

2 views

பெண்மையெனும் பூ
அழகான அல்லி பூ
தலையாட்டும் அந்தி பூ
இதழில் நிரம்பியிருக்கும் இனிப்பு பூ
உண்டு உறங்க அழைக்கும் தேன் பூ

நறுமணம் கமழும் பூ
இன்பம் அள்ளித்தரும் பூ
இல்லத்தில் சிறக்கும் பூ
இறைவனும் சூடும் பூ
இவ்வுலகில் இன்றியமையாத பூ

மலைக்காடுகளில் பூத்திருக்கும் குறிஞ்சி பூ
உள்ளத்தை கொள்ளையடிக்கும் முல்லை பூ
மனதிற்கு தூதுவிடும் மருத பூ
பருவ மணம் பரப்பி அழைக்கும் பூ

எழில் கொஞ்சும் இந்த பூ
விண்ணும் மண்ணும் மயங்கும் பூ
இந்திரலோகமும் ஏங்கும் பூ
மதுசிந்தும் மகரந்த இதழில் ஓரம்
பனித்துளிகள் வந்து ஒட்டிக்கொள்ள அழைக்கும் பூ

பார்ப்பவர் மனதை கவரும் பூ
பாரெங்கும் மலரும் இந்த பூ
இல்லையேல் ஏது உலக நடப்பு
இனிமை நிறைந்த இந்த பூ
வெறுப்பவர் இல்லாத பெண்மையெனும் பூ

இவள் பூத்து பளபளக்கும் பூ
இவள் தேகம் ஓர் நீர் பூ
தாகம் தீரும் வரை வண்டென
நீ வந்து பருகு

இவள் செழிக்கும் செந்தாமரை பூ
சந்திரனை வரவேற்கும் அலிசம் பூ
அன்பு மாறாத இவளொரு கோட்டு பூ
நீ பாசத்தோடு வந்து பழகு

பூவை இவளுக்குள் இரண்டு குவளை பூ
சிறுகை நீட்டி அரும்பும் மழலை பூ
காதல் மனம் திறக்கப்படும் முகை பூ
நந்தவனத்தில் மலர்ந்து மயக்கும் மல்லி பூ
இத்தனை பூவும் பெண்மையெனும் அதிசய பூ.
- சங்கத்தமிழன்