...

9 views

மனமெனும் மாயை
மனம் எனும் பறவை
பறந்துகொண்டே இருந்தால்
இழக்கும் நல்லுறவை,

மனமொரு மாயை
அதை மதிக்காவிடில்
செய்துவிடும் லீலை,

மனமொரு பிடிவாத குழந்தை
எதை நோக்கியும்
எளிதில் சென்றுவிடும்,

மனதிற்கும் கவர்ச்சிக்கும்
அழகான பொருத்தம் - கண்டதுமே
காந்தம் போல் பாய்ந்துவிடும்,

நன்மைக்கும் தீய்மைக்கும்
மனமே பொறுப்பு
நல்ல உணர்வோடு செயல்பட்டால்
தோன்றாது எப்போதும் வெறுப்பு,

மனமென்பதை மாசில்லாமல்
தூய்மைபடுத்தி வைத்துக்கொண்டால்
வீழ்ச்சி உனக்கில்லை ஒத்துக்கொள்,

மனமும் அறிவும்
உனக்குள்ளே வாழ்ந்திடும்
இரண்டு தெய்வங்கள்,

இரண்டில் ஒன்றுயில்லையேல்
உனது லட்சியங்கள்
ஒருபோதும் வெற்றியினை ஈட்டாது,

நற்சிந்தனைகள் பிறக்க
வளர்ச்சியினை நோக்கி பயணிக்க
மனம் அறிவு இரண்டையும் போற்று,

இயங்கி கொண்டுயிருக்கும்
வாழ்க்கை எனும் பயணத்தில்
மனதை ஆளப்பழகிக் கொள்
மனதை வணங்கவும் பழகிக்கொள்.
-சங்கத்தமிழன்