...

5 views

love my vinayagar
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை...!!

🌰 அரசமரம், வன்னிமரம் என மரத்தடியில் குடி கொண்டிருப்பவர் விநாயகர். முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான விழா விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம்.

🌰 அந்த வகையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா ஆவணி மாதம் 15ஆம் தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

🌰 விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை எப்படி சுவையாக செய்வது? என்றும், கொழுக்கட்டையை விநாயகருக்கு படைப்பது ஏன்? என்றும் பார்க்கலாம்.

கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி?

🌰 முதலில் கொழுக்கட்டை மாவில் உப்பினை கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து கொழுக்கட்டை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.

🌰 பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்து அதில் சிறிதளவு பு+ரணக்கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.



🌰 திரட்டும்போது பூரணக்கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்து கொள்ளவும். எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்தபின் இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

🌰 விநாயகருக்கு பிடித்த சுவையான கொழுக்கட்டை தயார்.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?

🌰 விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.

🌰 மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் கொழுக்கட்டை என்னும் மோதகத்தை படைக்கின்றோம்.

🌰 மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம். அதன் உள்ளே இருக்கும் பு+ரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பு+ரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பு+ர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.

🌰 கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தௌpவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

🙏 விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை படைத்து விநாயகரின் அருளைப் பெறுவோம்...!! 🙏