...

3 views

அவள்...
அவள்...
மரகத மஞ்சல் பூ...
மகரந்தச் சுரங்கம்...
வாசனைக் கிடங்கு...
வசீகர மீன் தொட்டி...
மனிதர்கள் மீளாக் காடு...
மத்தாப்புக் கூட்டம்...
விழாத விண்மீன் கூடம்...
நிறைமாத வெண்நிலா...
வால்முளைத்த விண்கல்...
கூதல் கொடுக்கும் சுடர்...
உள்ளிழுக்கும் வெண்புழை...
சுவாசிக்கும் குட்டிப் பிரபஞ்சம்...
ஒரு நொடிப் பிரளயம்...
ஓயாத ஒளிச்சிதறல்...
ஓடும் வெண்பனி...
நின்றுவிட்ட திரைக்காட்சி...
நீங்காத நிம்மதி...
நித்திய சொற்கம்...
திரும்பிய குழந்தைப் பருவம்...
தீராத உயிர்நதி...
தீர்த்த சமுத்திரம்...
திகைக்க வைக்கும் தித்திப்பு...
சிறு சொட்டுக் காதல்...
சின்ன ஆயுல் ரேகை...
சீக்கிரமாய் கடந்துவிட்ட மகாயுகம்...
27 வருடம் கழிந்து மீண்டும்
பிறந்த குழந்தையாய் நான்...

~*~

© Mutharasu Mahalingam