...

6 views

நிலவும் அவளும்
இரவின் பொழுதில் நதிக்கரை ஓரம் அவள் இருக்க,
மர கிளை மேல் நானும் தனித்து இருக்க கார்மேக கூந்தல் காற்றில் ஆடிட அடடா அவளும் எத்தனை அழகு,
இருள் சூழ்ந்த பொழுதில் நிலவின் நடுவில் அவளும் சிலையாய் தோன்றிட கதைகள் கூற மறந்த அழகை காணவே,
என் செய்தேன் நானும் பார்த்த நொடியில் காதலில் திளைத்த இதயம் தடுமாறும் பொழுதில் அவளின் இதழ் சிரிப்பில் நான் சிறை வாசம் சென்றேன், விரல் அசைவில் அவள் காற்றில் கோலமிட, வானவில் வந்து மறைந்து போனதே.
வர்ணிக்க ஆசையடி மொழி தேடி மனம் சுற்ற அனைத்தும் மறந்து உன்னிடன் நான் சரண் அடைந்தேன் அழகே.
நிலவும் பொறாமை கொண்டு மேகம் நடுவே ஒளிந்து கொள்ள, என்ன செய்தாய் அழகே யாவும் உன் அழகில் மயங்கி இருக்க.
இரவின் மையில் தீட்டிய ஓவியமே
© அருள்மொழி வேந்தன்