...

15 views

பிழையன்றோ? சரியன்றோ?-01
அள்ளி அணைக்க
அவளுண்டு!
எண்ணியதெல்லாம்
வாங்கி தர அவனும் உண்டு!
பஞ்சமென்று வாடியதில்லை
பஞ்சனைகள் போதவில்லை
பையில் பணமிருக்கையில்
பகட்டுக்கு குறைவில்லை
பட்டுப் போன்ற தரை...
கல்லுக்கும் முல்லுக்கும்
பழகவில்லை!
வானைத் தாண்டி
வலம் வரலாம்...
வாழ்கை வாழவே!
என போதிக்கலாம்...
கண்டதைக் காணலாம்,
வசமாக்கலாம்!
பசி இல்லாது,
பாலுண்டு பழமுண்டு!
முயற்சியென்ற வார்த்தைக்
கேட்காது, பண்பென்றது -
யாதென அரியாது,
வழிகள் பல மாறி,
பிறர் யாராய் இருந்தால் என்ன?
என்று பிழையாய் வளர்ந்து!
அகந்தைக்கும் சுயமரியாதைக்கும்
வேற்றுமை அரியாது,
மூடம் என்றுசொல்ல
முடியாமல்,
உயர்ந்தோர் என்று அழைக்க,
வாய்ப்பும் இல்லாமல்!
கொஞ்சலாய் கூட
அடியொன்றோ, அதட்டலொன்றோ வாங்காது,
தோல்விக் காணா உள்ளம்...
இடி வருகையில்
சாமர்த்தியமாய்
சமளிக்க தெரியாமல்
துவண்டு மிரண்டு கிறங்கி
மறைக்களண்று,
கொலை அல்ல தற்கொலை
இல்லையேல், ஓடி ஒளிந்து
பிழைத்து களைத்து தெளிந்து
மாறி...
வாழாமல் மனதுள் அவ்வளவையும் அடைத்துக் கொண்டு எண்ணமெல்லாம் அமிர்தமில்லாது விடம் எரி
துன்பமே உருவுற்று அக்குழுவி மாண்டோடக் காரணம் யாராயிற்றோ?
.
.
.
© kookoo
.
.
.
#part-01 #badparents #lessons #life #money #writco #nallathusollivalarkanum #lifeisnotbedofroses