...

6 views

மனதில் உறுதி...l
உறுதிபடைத்த
உள்ளம்
உடைந்து போன போது...
உலகமே..தன்னை
விலக்கியது போல்
கலங்கிப் போனது..
கலகமும் சூழ்ச்சியும்
கைகோர்த்திடும்
பூமியில்..
நமக்கென யாரும்
பிறக்கவில்லையோ என
கழிவிரக்கம் கொண்டது
மனது...!
அறிவுச்சூரியன்
விடியலில்
ஆன்மாவின் குரல்
பேசிடும்..!
...
இருளிலிருந்து
ஒளியைப்பார்த்தால்
வழிபிறக்கும்..
தன்னம்பிக்கை ஒளியேந்தி
நன்னம்பிக்கை முனை
நோக்கி..
மனஉறுதியெனும்
மாபெரும் ஆயுதமேந்தி
இருளைக் கிழிப்போம் வா..!

© SrinivasRaghu