...

1 views

சுட்டிக் குட்டீஸ்....
இன்று டியூஷனில்....

இறுதியாக ஒரு நான்கு மாணவர்கள் மட்டும் இருந்தனர். அவரவர் வீட்டுப் பாட வேலைகளை முடித்து விட்டு பெற்றோர் வருகைக்காக் காத்திருந்தனர் .... அப்போது One.... Two.... Three.... Four..... Bus விளையாட்டு விளையாடலாம் வாங்க என்று நால்வரும் சொல்லி சரி நீங்கள் விளையாடுங்கள் சத்தம் போடாமல் அக்காவுக்கு வயிறு வலி நான் ஓய்வெடுக்கிறேன் என்றேன்..... இல்லை முடியாது நீங்களும் வந்தே ஆக வேண்டும் என அன்பு அடம் சரியென்று ஐவரும் விளையாடினோம்.... அது என்ன விளையாட்டு என்றால் one two three வரிசையாக சொல்லிக் கொண்டே வர 5 , 10, 15 ,20 இவ்வாறு 5 ம் பத்தும் வரும் நபர் மட்டும் அந்த எண்ணைச் சொல்லாமல் அதற்கு பதிலாக பஸ் என்று சொல்ல வேண்டும் மாற்றிச் சொல்லிவிட்டால் அந்த நபர் விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும் இதுவே விதிமுறை....

இப்படியாக இரண்டு மூன்று சுற்று நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்க ஒரு சுற்று முடிந்து மறுபடி‌ புதிதாக மற்றொரு சுற்று ஆரம்பிக்கும் போது ஒரு மாணவர் ஒன்று என்றார். டியூஷன் எல்லாரும் ஆங்கில வழிப்...