...

10 views

பரம ஏணி
ஒவ்வொரு இரவும்
உம் தூதர்கள் என்னை சுற்றிலும் இறங்கி காக்கணுமே
ஒவ்வொரு உறக்கமும் உம்மண்டை என்னை சேர்க்கும் கனவாய் இருக்கணுமே

வாழ்வின் மையத்தில் உம் கரமே என்னைத் தாங்கி நடத்தனும்
வாழ்வின் இறுதியில்
கண்களை மூடும் நொடி எனக்கு பரம ஏணி ஆகணும்

வாழ்வில் சேர்ந்திடும் ஒவ்வொரு நன்மையும் உம்மாலே சேரணும்
வாழ்வில் நீரெனக்கு
தந்திடும் நன்மை எல்லாம்
உம் அருகே என்னை சேர்க்கணும்

வாழ்வில் என்னை எதிர்த்திடும் சேணைக்குள்
உம்மாலே பாய்ந்தடுவேன்
வாழ்வில் மதில்போல்
உள்ள தடைகளெல்லாம்
உம்மாலே தாண்டிடுவேன்







© gladis