...

3 views

நெருப்பு..
தன்னுள்ளே வெப்பத்தை 
                          தாங்கி யிருக்கும் நெருப்பு 
தன்னைத் தீண்டுபவரை 
                          நித்தம் நிகழ்த்திடும் எரிப்பு 
அகலாது அணுகாது 
                   இருப்பவர்க்கே அது கதகதப்பு
அவ்வண்ணமே கொள்ள வேண்டும் 
                                          அரசியலில் நட்பு

பெண்ணும் கூட தன்னகத்தே 
                                  கொண்டவள் நெருப்பு  
பெரிது படுத்திப் பேசப்படுவதோ 
                                       அவளுடைய வனப்பு 
பண்புடன் நடந்து கொள்பவர்க்கே 
                                  தருவாள் மதிப்பு
பண்பாட்டை மீறுபவருக்கு 
                            கிடைத்திடும் அவ மதிப்பு 

எதுவும் இல்லாமல்
புகைவதில்லை இந்த நெருப்பு
எதற்கெடுத்தாலும் இப்படிச் 
                         சொல்வது சிலர் பிழைப்பு
அனைவர் வாழ்வோடு 
                        இணைந்ததே இதன் சிறப்பு
அதை அறிந்து வாழத் 
                         தெரிந்தவர்க்கே பாதுகாப்பு

மா.ஷங்கர்.