...

5 views

ஒரு கோப்பை காபி
ஒரு கோப்பை காபியில்
தொடங்கியது நமது உரையாடல்..

குறுஞ்செய்திகள்..மின்னஞ்சல்கள்..அலைபேசி வழியாக காபியின் மணம் மனமெங்கும்
பரவியது..

வெடிச்சிரிப்புகள்..உன் "வணக்கம்"..."கேட்குதா"என்ற என் ஓயாத கேள்விகள்..'சாப்பிட்டீங்களா..ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..'
வாழ்க்கையின் வலிகள் மறைக்க நாம் புனைந்த கதைகள்..

உலக திரைப்படங்கள்...புத்தகங்கள்..அரசியல்..மரபியல்..மருத்துவம்...நாம் குத்தி கிழித்த நபர்களுக்கு எண்ணிக்கை உண்டா?

அதே வார்த்தைகளால்
ஒரு மதிய பொழுதில்
மாறி மாறி இரத்தம் வர கீறிக்கொண்டோம்..ஆறா காயங்கள்..தீராத வலிகள்..

நாம் உருவாக்கிய உலகத்தை
நாமே கலைத்துக் கொண்டோம்..
வேண்டி கொண்டு வந்த
தோண்டியை சுக்கு நூறாய் உடைத்தோம்..

காரணம்..நானா..நீயா..
காபி கோப்பையை கவிழ்த்து பார்க்கிறேன்..
ஒரு சொட்டு கூட மிச்சமில்லை..
கறை மட்டும் மாறவேயில்லை..
கை வலிக்க தேய்த்து கவிழ்த்து வைக்கிறேன்..
அலங்காரமாய் அலமாரியில்...


© nandini bose